திருவனந்தபுரம், மே 16: பாறசாலையை சேர்ந்தவர் ஷாமிலி. வக்கீலான இவர் திருவனந்தபுரம் நீதிமன்ற மூத்த வக்கீலான பெய்லின் தாஸ் என்பவரிடம் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 3 தினங்களுக்கு முன் அலுவலகத்தில் வைத்து ஷாமிலியை பெய்லின் தாஸ் சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வஞ்சியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பெய்லின் தாஸ் தலைமறைவானார். அவரை ஸ்டேஷன்கடவு என்ற இடத்தில் வைத்து தும்பா போலீசார் கைது செய்தனர்.
The post பெண் வக்கீலை தாக்கிய சீனியர் வக்கீல் கைது appeared first on Dinakaran.
