×

திப்பிறமலை – ஈத்தங்காடு சாலை ரூ.68.36 லட்சத்தில் சீரமைப்பு பணி ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கருங்கல், மே.15: கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட திப்பிறமலை – ஈத்தங்காடு சாலை சீரமைத்து பல வருடங்கள் ஆகியதாலும், கனமழையினாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த பழுதடைந்த சாலையை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், ஆட்சியர், துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அதன்படி திப்பிறமலை – ஈத்தங்காடு சாலையை சிரமைக்க ரூ.68.36 லட்சம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து சாலை சீரமைப்பு பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கருங்கல் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், திப்பிறமலை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் பிறைட் உள்பட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

The post திப்பிறமலை – ஈத்தங்காடு சாலை ரூ.68.36 லட்சத்தில் சீரமைப்பு பணி ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thippiramalai - Ithangadu ,Rajesh Kumar MLA ,Karungal ,Thippiramalai - Ithangadu road ,Killiyur ,Thippiramalai ,Ithangadu ,Dinakaran ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...