- பௌர்ணமி தேர் திருவிழா
- அஸ்தினபுரம் கிராமம்
- அரியலூர்
- சித்திரை பௌர்ணமி
- பாலமுருகன் கோயில்
- அரியலூர் மாவட்டம்
அரியலூர் மே 14: அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் சித்திரை பெளர்ணமியை முன்னிட்டு நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. 23 அடி உயரம் உள்ள பாலமுருகன் சிலை கோயிலில் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் பாலமுருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 10ம் தேதி திருகல்யாணம் நடந்தது.
இந்நிலையில், நேற்று காலை பாலமுருன், வள்ளி, தெய்வயானை சுவாமிகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், திரவியபொடி, சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு வஷ்திரம் சாத்தப்பட்டு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் மேளதாளங்கள் முழங்க தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.
The post அரியலூர் அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் பவுர்ணமி தேர்திருவிழா appeared first on Dinakaran.
