×

நாகை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

நாகப்பட்டினம், மே 14: நாகப்பட்டினம் செல்லூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவி மையம் வழியாகவும் வரும் 27ம் தேதி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். கல்லூரியின் உதவி மையம் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை செயல்படும்.

விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 பெறப்படுகிறது. எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கு விண்ணபிக்க கட்டணம் ஏதுமில்லை. ஆனால் பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டும் பெறப்படும். பாஸ்போர்ட் அளவு போட்டோ, வருமான சான்றிதழ், சாதிசான்று, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ் மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை அவசியம் எடுத்து வர வேண்டும். கூடுதல் தகவல் பெற 04365-220066, 9976596006, 9894115300, 9442389622 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post நாகை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagai Government College ,Nagapattinam ,Government Arts and Science College ,Sellur ,Tamil Nadu… ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...