×

நாகப்பட்டினத்தில் கோடைகால பயிற்சி

நாகப்பட்டினம், மே 14: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடைகால சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு பைத்தான், ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங், அபாகஸ், உள்ளிட்டவைகளுக்கு கோடைகால சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான முழு விவரத்தையும் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் செயல்படுகின்ற மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்ட அலுவலகத்தில் பெற்று கொள்ளவும். மேலும் பைத்தான், ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சிகளுக்கு 9842026936 என்ற எண்ணையும், அபாகஸ் பயிற்சியானது நாளை(15ம் தேதி) முதல் வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்கு 9342144539 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு முழு தகவல் பெற்றுகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினத்தில் கோடைகால பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Akash ,Nagapattinam district ,Robotics ,Abacus ,Dinakaran ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...