×

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் வைகாசி மாத பூஜைகள் நடக்கிறது. இதை ஒட்டி இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறப்பார். இன்று சிறப்பு பூகைள் நடக்காது. நாளை முதல் கணபதி ஹோமம், உஷ பூஜை உட்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமய பூஜை, படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடக்கும். வரும் 19ம் தேதி வரை கோயில் நடை திறந்து இருக்கும்.

The post சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala temple ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,Melshanthi Arunkumar Namboothiri ,Thanthri Kandarar Rajeevar ,
× RELATED த.வெ.க. நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை