×

வெயிலை பொருட்படுத்தாத இளம் கன்றுகள்… பெரம்பலூரில் சித்ரா பௌர்ணமி சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர்,மே.13: பெரம்பலூர் நகரில் தெப்பக்குளம் கிழக்கே அமைந்துள்ள  மரகதவல்லித் தாயார் சமேத  மதனகோபால சுவாமி திருக்கோவிலில், சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு நேற்று காலை 11 மணி அளவில் சீதாதேவி சமேத ராமர்  லட்சுமணர், அனுமனுக்கு மற்றும் கம்பத்து ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி பால், தயிர், சந்தனம், பழவகைடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இந்த பூஜைகளில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், நாராயணன், ராமலிங்கம், ஏராளமான பெருமாள் பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு சீதாதேவி ராமர், சமேத லட்சுமணன் திருவீதி விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

The post வெயிலை பொருட்படுத்தாத இளம் கன்றுகள்… பெரம்பலூரில் சித்ரா பௌர்ணமி சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Chitra Pournami ,Perambalur ,Maragathavalli Thayar Sametha ,Madanagopala Swamy temple ,Theppakulam ,Chitra Pournami festival ,Sitadevi Sametha ,Rama ,Lakshmana ,Hanuman ,Chitra Pournami in ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்