×

திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பரமக்குடி,மே 13: பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய நகர அளவில் திமுகவின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் குணசேகரன் வரவேற்றார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாநில தீர்மானக் குழு துணை தலைவர் திவாகரன், தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நாகநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சன் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை இளையராஜா இன்னிசை கச்சேரியுடன் பாடல் அளவில், பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். முன்னாள் போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் தங்கராஜ் ஆகியோர் நான்கு ஆண்டு சாதனை குறித்து பேசினர்.

இந்த பொதுக்கூட்டத்தில், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், பரமக்குடி தெற்கு நகர இளைஞரணி அமைப்பாளர் துரைமுருகன் உள்ளிட்ட 500க்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் முன்னாள் பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

The post திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Paramakudi ,Bogalur West Union ,District Secretary ,Kadhar Badsha Muthuramalingam ,MLA ,Union ,Dinakaran ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...