- யூனியன் அரசு
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சட்டமன்ற உறுப்பினர்
- வெங்கடேசன்
- Alanganallur
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு அரசு
- இந்தியா
- மேற்கு ஒன்றிய தி.மு.க
- பெரியஇளந்தைகுளம்
- தமிழ்
- தமிழ்நாடு
- எம்எல்ஏ வெங்கடேசன்
அலங்காநல்லூர், மே 13: ஒன்றிய அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே, தமிழக அரசை பல்வேறு துறைகளின் இந்தியாவின் முதல் மாநிலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என, வெங்கடேசன் எம்எல்ஏ கூறினார். அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைக்குளம் கிராமத்தில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழக அரசின் நான்கு ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மேற்கு ஒன்றிய செயலாளர் பொதும்பு தனசேகர், பேரூர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் தர்மபுரி அதியமன், செசிலின் சந்தியா தீப்தி ஆகியோர் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினர். இதில் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் பேசியதாவது: முதல்வரின் நான்கு ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில், சோழவந்தான் தொகுதியில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக வானளாவிய கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம், கிராமப்புற ஏழை மாணவர்கள் தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக முதல்வர் விளையாட்டு அரங்கம், பாலங்கள், கிராமச் சாலைகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் நீட் தேர்வு நெருக்கடி, கல்வி நிதி உதவி தர மறுப்பு, 100 நாள் வேலை நிதி ஒதுக்கீட்டில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு இக்கட்டான சூழ்நிலையிலும் பல்வேறு துறைகளிலும் இந்திய அளவில் முதல் மாநிலமாக தமிழகத்தை எடுத்துச் சென்றுள்ளது நம் முதல்வரின் தனித்திறமைக்கு ஒரு சான்றாக உள்ளது. இவ்வாறு கூறினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் நடராஜன், விஜயன், அருண்குமார், ஜெயபிரகாஷ், அணி அமைப்பாளர்கள் மருது பாண்டியன், சந்தனகருப்பு, தவசதீஷ், ரியாஸ்கான் ,ராகுல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக கிளைச் செயலாளர் அற்புதம் நன்றி கூறினார்.
The post ஒன்றிய அரசின் நெருக்கடிகளுக்கு நடுவே தமிழகத்தை முதல் மாநிலமாக முதல்வர் உருவாக்கியுள்ளார்: எம்எல்ஏ வெங்கடேசன் பெருமிதம் appeared first on Dinakaran.
