×

துப்பாக்கியுடன் டூவீலரில் சுற்றி திரிந்த ஜோடி வீடியோ வைரல்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பட்டணம் மாரியம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு டூவீலரில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் வந்தனர். ஒரு வீட்டின் அருகே டூவீலரை நிறுத்தியதும், அந்த பெண் கீழே இறங்கினார். அந்த வாலிபர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் எங்கோ சுட முயற்சித்தார்.

அப்போது, நாய்கள் சத்தம் போட்டதால், டூவீலரை திருப்பிக்கொண்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து அதே இடத்திற்கு வந்து அங்கு நின்றிருந்த நாயை, அந்த வாலிபர் துப்பாக்கியால் சுட்டார். சத்தம் கேட்டு மற்றொரு நாய் வரவே, இருவரும் டூவீலரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பட்டணம் பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

The post துப்பாக்கியுடன் டூவீலரில் சுற்றி திரிந்த ஜோடி வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Duweiler ,Mariyamman temple ,Namakkal district ,
× RELATED மருதநல்லூரில் டெலிவரி நிறுவன ஊழியர்...