- அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு
- விருதுநகர்
- அஞ்சல்
- ஒன்றிய மாநாடு
- எட்டாவது ஊதியக் குழு
- பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு
- விருதுநகர் தலைமை அஞ்சலகம்
- எழுத்தர்கள் சங்க மாநிலம்
- மைக்கேல் ராஜ்...
- அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு
- தின மலர்
விருதுநகர், மே.12: எட்டாவது ஊதியக்குழுவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் தலைமை அஞ்சல் நிலையத்தில் பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு எழுத்தர் சங்க மாநில செயலாளர் மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டில் அஞ்சல் ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலை அமல்படுத்த வேண்டும். 8வது ஊதியக்குழுவை விரைவில் அமல்படுத்த வேண்டும். 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் அஞ்சல் துறை ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 20 முதல் 35 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். நிர்வாகிகள் ரமேஷ், சங்கர், காளிமுத்து, கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
The post அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு appeared first on Dinakaran.
