சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் தீபசக்தி(15). 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதியுள்ளார். தேர்வு விடுமுறைக்கு இளையான்குடி அருகே அரியாண்டிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த இளையான்குடி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் தீபசக்தி தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதற்காக அவரது தந்தை கண்டித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
The post மாணவி தற்கொலை appeared first on Dinakaran.
