×

பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது: வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேட்டி

டெல்லி: பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது. தற்போதைய நிலை குறித்து ராணுவம் கண்காணித்து வருகிறது என வெளியுறவுத்துறை செயலாளர் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளர். கடந்த சில மணி நேரமாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறியது கண்டனத்துக்கு உரியது.இந்திய எல்லையை நமது வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்; பதில் தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்து பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

The post பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது: வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Foreign Secretary ,Vikram Misri ,Delhi ,Dinakaran ,
× RELATED திருட்டு வழக்கில் இளைஞரை சித்ரவதை...