டெல்லி: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் 2024-2025 ஆண்டு அறிக்கையின்படி காப்பீட்டு துறையில் தவறான விற்பனை அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நியாயமற்ற வணிக நடைமுறைகள் தொடர்பான புகார்கள் கடந்த ஆண்டை விட அதிகரித்து மொத்த புகார்களில் 22.14 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
தனிநபர் காப்பீட்டு பிரீமியம் 8551 ரூபாயிலிருந்து 8731 ரூபாயாக அதிகரித்துள்ளது. தவறான விற்பனையை தடுக்க காப்பீட்டு நிறுவனங்கள் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தவறான விற்பனையால் வாடிக்கையாளர்கள் பாலிசிகளை புதுப்பிக்க தவறுவதால் பாலிசிகள் ரத்தாகும் விகிதம் அதிகரிப்பதாக நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.
