ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி ராஜாஜி வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (40). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி கீதா (32). திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், தம்பதியினர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாதேஸ்வரன், மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு குழந்தை இல்லாதது குறித்து சகோதரரிடம் புலம்பினார். அங்கிருந்து வீட்டுக்கு சென்றதும் மனவேதனையில் இருந்த மாதேஸ்வரன் மற்றும் கீதா ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
The post குழந்தை இல்லாததால் தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.
