- உயர் நீதிமன்றக் கிளை
- ஒன்றியம், அரக்கோணம் ஊராட்சி
- மதுரை
- மதுரை கிளை
- உயர் நீதிமன்றம்
- கெ ரமேஷ்
- பஹல்கம்
- தின மலர்

மதுரை: சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டறிந்து வெளியேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பஹல்காம் சுற்றுலா தலத்தில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவுகிறது. விசா ரத்து செய்வதன் மூலம் இங்குள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதிகளை ஆதரித்து பேசும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், மியான்மர்கள் மற்றும் ஆப்ரிக்க நாட்டினர் என சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கி உள்ளவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ‘‘இதுகுறித்து சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் விசா முடிந்த பிறகும் 70 ஆயிரம் வெளிநாட்டவர் தங்கி உள்ளனர். சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
The post சட்டவிரோதமாக தங்கியுள்ள 70 ஆயிரம் பேர் வெளிநாட்டினரை வெளியேற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒன்றிய, மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
