- திருச்செங்கோடு
- சக்கரம்பாளையம்
- கொன்னையாரு பஞ்சாயத்
- எலச்சிபாளையம் ஒன்றியம்
- திருச்செங்கோடு தாலுகா
- அருந்ததியார் தெரு
- சின்டெக்ஸ்...
- தின மலர்
திருச்செங்கோடு, மே 8: திருச்செங்கோடு அருகே சக்கராம்பாளையம் பகுதியில் போர்வெல் மோட்டார் பழுதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருச்செங்கோடு தாலூகா, எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையாறு ஊராட்சி சார்பில், சக்காராம்பாளையம் அருந்ததியர் தெருவில் போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் டேங்க் வைத்து, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் உள்ளது. இந்த தண்ணீர் தொட்டிக்கு செல்லும் மோட்டார் பழுதாகி உள்ளதால், குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. கோடை ஆரம்பித்து வெயில் வாட்டி வதைப்பதால், தண்ணீரின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக போர்வெல் மோட்டாரை சீரமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post போர்வெல் மோட்டார் பழுதால் குடிநீர் விநியோகம் பாதிப்பு appeared first on Dinakaran.
