×

நத்தம் பள்ளபட்டியில் புரவி எடுப்பு விழா

 

நத்தம், மே 8: நத்தம் அருகே பண்ணுவார்பட்டி ஊராட்சி பள்ளபட்டியில் உள்ள அய்யனார், மதுரை வீரன் மற்றும் கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று மாலை அய்யனார், மதுரை வீரன் மற்றும் கன்னிமார் சுவாமிகள், மதலைகள் உள்ளிட்ட புரவிகள் மேளதாளம் முழங்க, அதிர்வேட்டுகளுடன் வர்ணக்குடை தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக சென்று இருப்பிடம் போய்ச் சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

The post நத்தம் பள்ளபட்டியில் புரவி எடுப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Puravi ,Pallapatti ,Natham ,Ayyanar ,Madurai Veeran ,Kannimar Swamijis ,Pannuvarpatti Panchayat ,Swamijis ,
× RELATED விவசாயிகள் பயிற்சி முகாம்