×

671 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல் பரமக்குடி அரசு கல்லூரியில்

பரமக்குடி,ஜன.10: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவ,மாணவிகளுக்கு இலவச லேப்டாப்பை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயின்று வரும் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ,மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தினை காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக பரமக்குடி அரசு கலை, கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். முன்னதாக மின்னணுவியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். திட்ட இயக்குனர் பாபு, கோட்டாட்சியர் சரவண பெருமாள், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் கலந்துகொண்ட பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு கலை பெண்கள் கல்லூரி மாணவ,மாணவிகள் 671 பேருக்கு லேப்டாப்களை வழங்கினார். பரமக்குடி வட்டாட்சியர் வரதன், பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வேந்தோணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ், ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Paramakudi Government College ,Paramakudi ,Paramakudi MLA ,Murugesan ,Paramakudi Government Arts College ,Tamil Nadu Government ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி