×

மஞ்சுவிரட்டில் 5 பேர் காயம்

 

திருப்புத்தூர், மே 8: திருப்புத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்புத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி பகுதியில் உள்ள அச்சரம்பட்டி கிராமத்தில் கிராம தெய்வங்களுக்கு வருடாந்திர பால் சிறப்பு திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு மாடுகள் அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் மாடுகளை அடக்கினர்.அதில் மாடு முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக வடக்கு இளையாத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில், அச்சரம்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி(57), அடைக்கண்(60), மாணிக்கம்(60), முத்து(55), கருப்பையா ஆகிய 5 பேர் மீது கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மஞ்சுவிரட்டில் 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manjuvirattu ,Tiruputhur ,Acharambatti ,Keelachivalpatti ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்