×

பொதுநூலகத்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 14 நாள் கோடைக்கால சிறப்பு முகாம்

சென்னை: பொது நூலகத்துறையின் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பாக 14 நாட்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நாளை (மே 9) தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. அண்ணாசாலையில் உள்ள சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கில் நடைபெறவுள்ள இந்த முகாமில், 14 துறை சார்ந்து 60 தலைப்புகளில் 60 வல்லுநர்களும் ஆளுமைகளும் உரையாற்றுகின்றனர்.

இப் பயிலரங்கில் உயர்கல்வி, திரைப்படக்கலை, சமூக ஊடகப் பயிற்சி, கவிதை, புனைகதை, தமிழ்ப் பதிப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு, ஒலிபரப்பு, மின்நூல்கள், இதழியல், பேச்சுக்கலை, காட்சி ஊடகம் என பல்வேறு துறைகளில் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டும் விதத்தில் இப் பயிலரங்கு நடைபெறுகிறது. முன்பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம். தொடர்புக்கு 7845221882 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.

 

The post பொதுநூலகத்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 14 நாள் கோடைக்கால சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Public Library Department ,Chennai ,Chennai District Library Commission ,Chennai Devaniyab Pavanar District Center ,Anna Salai… ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...