×

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தானே.. கூப்பிட்டா போக வேண்டியது தானே.. நடிகை குஷ்பு பேட்டி

சென்னை: கரூர் விவகாரத்தில், விஜய் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார். இப்போது சிபிஐ விசாரணை செய்கிறது. அதை அவர்கள் பார்க்கத்தான் வேண்டும் என சென்னை விமான நிலையத்தில் பாஜ மகளிர் அணி நிர்வாகி நடிகை குஷ்பு கூறினார். பாஜ மகளிர் அணி நிர்வாகி குஷ்பு சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பராசக்தி படம் வெளிவந்துள்ளதுக்கும், ஜனநாயகம் படம் வெளிவராததற்கும், ஒன்றிய அரசை எப்படி குற்றம் சாட்ட முடியும்? இதைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யும் நபர்கள், கொஞ்சம் கூட யோசித்து பேச மாட்டார்களா? ஒரு குழந்தை அழுதால், அது பசிக்கிறதால், அழுகிறது என்று பார்ப்பதில்லை. அதற்குக் கூட ஒன்றிய அரசுதான் காரணம் என்று கூறுவது போல் உள்ளது.

அவர்களை நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒன்றிய சென்சார் போர்டு விதிமுறைகள்படி, அனைத்து சான்றிதழ்களும் கிடைக்கப்பெற்ற பிறகுதான், படத்தின் வெளியீடு தேதிகளை அறிவிக்க வேண்டும். ஆனால் எந்த தயாரிப்பாளரும், இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது, தவறு சொல்லவில்லை. தயாரிப்பாளர்கள் தான் தவறு செய்கிறார்கள்.

நானும் எனது மகளும் மிகப்பெரிய அளவில் விஜய்யின் ரசிகர்கள். அதன் அடிப்படையில், அவரின் ஜனநாயகன்படம் வெளிவராவது, எங்களுக்கு மிகவும் வருத்தம் தான். கரூர் விவகாரத்தில் விஜய்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார். தற்போது சிபிஐ விசாரணை செய்கிறது. அதை அவர்கள் பார்க்கதான் வேண்டும். இவ்வாறு குஷ்பு கூறினார்.

Tags : Vijay ,CBI ,Karur ,Khushbu ,Chennai ,BJP ,Chennai airport ,BJP… ,
× RELATED 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கலை...