- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மோடி
- காந்தி
- செல்வப்பெருந்தக
- சென்னை
- யூனியன் அரசு
- துணைத் தலைவர் ராம் ஜி
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- ராஜரட்ணம்
- எக்மோர், சென்னை
சென்னை: 100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ராம் ஜி’ என ஒன்றிய அரசு மாற்றியுள்ளதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். இதில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், சசிகாந்த் செந்தில் எம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செல்வப்பெருந்தகை பேசியதாவது:
ஒரு மோடி அல்ல, ஆயிரம் மோடி வந்தாலும் காந்தி பெயரை நீக்க முடியாது. காந்தியின் புகழை அழிக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நோக்கம். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எல்லோரையும் நேசிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதுதான். பாஜகவின் கொள்கை என்ன? இந்த நாட்டை ஒரு தரப்பினர் தான் ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மகாத்மா காந்தி பெயரைத் தாங்கி நிற்கும் 100 நாள் வேலைத்திட்டத்தைச் சீரழிக்க வேண்டும் என்று மோடி அரசு நினைக்கிறது. அதனைக் கண்டித்து தேசம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம். இறுதியாக தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரைத் திரட்டி டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
