சென்னை: இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் குண்டு வீசி அழித்தது. ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கும். போராளியின் போராட்டம் தொடங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
The post பஹல்காம் தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு appeared first on Dinakaran.
