நாகப்பட்டினம், மே 7: நாகப்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு நீச்சர் பயிற்சி தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நீச்சல் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளை சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து அதிக அளவில் சாதனைகள் படைப்பதற்காக துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நேற்று முன்தினம் சிறு விளையாட்டு அரங்கத்தை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கி பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டது. நீச்சல் சங்க மாவட்ட தலைவர் மோகன்தாஸ் 40 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக இலவச சீருடைகள் வழங்கினார். பயிற்சி முடித்தவுடன் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் சத்து நிறைந்த உணவும் இலவசமாக வழங்கப்பட்டது. நீச்சல் சங்க மாவட்ட செயலாளர் குணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், நீச்சல் பயிற்றுநர் சபரிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நாகப்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி appeared first on Dinakaran.
