×

ஊட்டியில் 523-வது மலைச்சாரல் கவியரங்கம்

 

ஊட்டி, மே 6: நீலகிரி மாவட்ட மலைச்சாரல் தமிழ் கவிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாதம் தோறும் கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கவியரங்கம் கடந்த பல ஆண்டுகளாக மாதம் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 523-வது மலைச்சாரல் கவியரங்கம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. செயலாளர் பிரபு தலைமை வகித்தார். மன்ற தலைவர் பெள்ளி முன்னிலை வகித்தார்.
மேலும் கவிஞர்கள் சுந்தர பாண்டியன், மகேந்திரன், ஜனார்தனன், சுகுணன், மணி அர்ஜூணன், நீலமலை ஜேபி, புலவர் நாகராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர். முன்னதாக பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கும், போப் புனித பிரான்சிஸ் மறைவுக்கும், புலவர் சோலூர் கணேசனின் மகள் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வை தொடர்ந்து தமிழக அரசு அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஒய்வூதியம் உயர்த்தியதற்கு மன்றம் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மலைச்சாரல் தமிழ் கவிஞர் சங்கத்தில் புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பது, புதிய கவிதை புத்தகங்கள் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

The post ஊட்டியில் 523-வது மலைச்சாரல் கவியரங்கம் appeared first on Dinakaran.

Tags : 523rd Mountain Poetry Festival ,Ooty ,Nilgiris District Mountain Poetry Festival Tamil Poets Association ,523rd Mountain Poetry Festival… ,
× RELATED கூடலூரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா