- பாக்கிஸ்தான்
- உ. காங்கிரஸ்
- லக்னோ
- வாரணாசி, உத்தரப் பிரதேசம்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- அஜய் ராய்
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
- இந்தியா...
- ரஃபேல்
- தின மலர்
லக்னோ: உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் அஜய் ராய், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின் அரசு ஏன் ரபேல் விமானங்களை பயன்படுத்தவில்லை. ரபேல் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டபோது அரசு அவற்றுக்கு எலுமிச்சை-மிளகாய் கட்டியது என்பதை நான் அரசுக்கு நினைவூட்டுகிறேன். எப்போது இவை அகற்றப்படும் மற்றும் ரபேல் விமானங்கள் தங்களது பணியை செய்யும்? எப்போது பாகிஸ்தானுக்கு செல்லும்.
நாட்டு மக்களுக்கும், தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தெரிந்து கொள்வதற்கு விரும்புகிறார்கள் ” என்று கூறியிருந்தார். அஜய்ராயின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜவின் உத்தரப்பிரதேச பொது செயலாளர் அமர்பால் மவுரியா கூறுகையில், ‘‘காங்கிரஸ் எப்போதும் பாதுகாப்பு படைகளை அவமதித்து வருகின்றது. அவர்களின் திறன்கள் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. இது அதற்கு இன்னொரு உதாரணமாகும் ” என்றார்.
The post ரபேலில் கட்டிய எலுமிச்சையை அகற்றி எப்போது பாகிஸ்தானுக்கு அனுப்புவீர்கள்: உ.பி. காங். தலைவர் கேள்வி appeared first on Dinakaran.
