×

ஓட்டல் துப்பாக்கிசூடு வழக்கு ராஜஸ்தான், டெல்லி, அரியானாவில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் நிம்ராணா நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஆண்டு செப்டம்பரில் துப்பாக்கிசூடு நடந்தது. மொத்தம் 35 ரவுண்டுகள் சுடப்பட்டன. ஓட்டலின் மேலாளர் மற்றும் உரிமையாளரிடம் ஆயுதங்களை காட்டி பணம் கேட்டு மர்மநபர்கள் மிரட்டியுள்ளனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம்(என்ஐஏ)யிடம் கடந்த டிசம்பரில் ஒப்படைக்கப்பட்டது.

என்ஐஏ விசாரணையில் கனடாவை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி அர்ஷ் டல்லாவுடன் தொடர்புடைய பம்பியா கோஷ்டியை சேர்ந்த நபர்கள் தான் இந்த துப்பாக்கிசூடு நடத்தியது தெரியவந்தது. இந்த நிலையில் நிம்ராணா துப்பாக்கிசூடு தொடர்பாக ராஜஸ்தான், அரியானா, டெல்லி ஆகிய 10 க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

 

The post ஓட்டல் துப்பாக்கிசூடு வழக்கு ராஜஸ்தான், டெல்லி, அரியானாவில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை appeared first on Dinakaran.

Tags : NIA ,Rajasthan, Delhi, Haryana ,New Delhi ,Neemrana Highway ,Rajasthan ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...