×

தேர்தல் தேதி அறிவிப்புக்கு 1 மணி நேரத்திற்கு முன் அதிரடி காட்டிய மம்தா: 2 திட்டங்களை வெளியிட்டார்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. இதனால், நேற்று மாலை 3 மணி அளவில் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘‘அனைத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், லட்சக்கணக்கான ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2009 அகவிலைப்படி நிலுவைத் தொகையை 2026 மார்ச் மாதம் முதல் வழங்குவதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதன் மூலம் எனது அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது’’ என்றார். மற்றொரு பதிவில் கோயில் பூசாரிகள் மற்றும் பாங்கு ஓதுபவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ மாத ஊதியம் ரூ.500 அதிகரிக்கப்படுவதாக மம்தா அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆன்மீக சேவை செய்யும் பூசாரிகள் மற்றும் பாங்கு ஓதுபவர்கள் இனி மாதத்திற்கு ரூ.2,000 மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த இரு அறிவிப்புகளால் அம்மாநில எதிர்க்கட்சி தலைவரான பாஜவின் சுவேந்து அதிகாரி செம காண்டாகி உள்ளார்.

Tags : Mamata ,Mamata Banerjee ,
× RELATED யுஏஇயின் புஜைரா முனையத்திலிருந்து...