×

எஸ்.ஏ. கல்லூரியில் மகளிர் வணிக மன்றம்

திருவள்ளூர், மே 6: திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘சாம்பவி’ என்ற மகளிர் வணிக மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ்ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் சாய் சத்தியவதி, கல்லூரி முதல்வர் மாலதி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பான்பிக்லியோலி டெக்னாலஜி ஸ்பேஸ் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர்அர்ச்சனா ராஜமாணிக்கம் மன்றத்தைத் தொடங்கி வைத்தார். சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் மற்றும் அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தரும் நடுவருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி பெண்களின் சட்ட நிலை குறித்த பயிலரங்கை நடத்தினார். அவர் பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

The post எஸ்.ஏ. கல்லூரியில் மகளிர் வணிக மன்றம் appeared first on Dinakaran.

Tags : S. A. Business Forum for Women in ,College ,THIRUVALLUR ,THIRUVENCHAT, ST. A. ,Women's Business Forum ,Chamhavi ,College of ,Arts ,Sciences ,P. Venkateshraja ,Sai Sathyawati ,Principal ,Malathi ,S. A. College Women ,Business Forum ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக...