×

திருத்தணி பிடிஓ மாரடைப்பால் மரணம்

திருத்தணி, ஜன.12: திருத்தணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஏ.சந்தானம்(58) பணியாற்றி வந்தார். திருத்தணி சக்திசாய் நகரில் வாடகை வீட்டில் அவரது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மாரடைப்பால் திடீர் மரணம் ஏற்பட்டு இறந்த தகவல் தெரிந்து கொண்டு, உடனடியாக திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

 

Tags : Tirutani ,Tirutani Panchayat Union ,Block Development ,Block Development Officer ,Panchayat ,A. Chanthanam ,Sakthisai Nagar, Tirutani… ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...