×

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுவதால், தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று வரும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய பாஜ அரசு பிடிவாதமாக மறுத்து வருவதால் அரியலூர் அனிதா முதல் மேல்மருவத்தூர் அருகில் உள்ள அகிலி கிராமத்தின் காயத்திரி வரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவி இரவு படுக்கைக்கு சென்றவர் விடியும் முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் (4.5.2025) நீட் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கும் மேலாக கருதும் “தாலி” கழட்டி வைக்க வேண்டும் என்பது தமிழர் மரபுக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. சட்டை பட்டன்கள் கூட எண்ணி பார்த்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் நுழையும் முன்பாகவே பதற்றத்தையும், படபடப்பையும் உருவாக்கியது அடக்குமுறை. இனியும் தாமதிக்காமல் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என பாஜ தலைமையிலான ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

The post நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Mutharasan ,Chennai ,Tamil Nadu ,Communist Party of India ,State Secretary ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...