கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று காலை மலை உச்சியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அங்கு சென்னையை சேர்ந்த கோபி என்பவர் லைட்மேன் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இவர், சில ெபாருட்களை எடுத்தபோது எதிர்பாராத விதமாக லைட் சாதனம் சரிந்து அவரது தலையில் விழுந்தது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக படப்பிடிப்பு தளத்தில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் தாண்டிக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post விஜய் படப்பிடிப்பு தளத்தில் விபத்து லைட்மேன் காயம் appeared first on Dinakaran.
