- மாட்ரிட் ஓபன் டென்னிஸ்
- சபலெங்கா
- மாட்ரிட்
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சாம்பியன்ஷிப்
- மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி
- ஸ்பெயின்
- தின மலர்
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது இந்த ஆண்டில் அவர் பெறும் 3வது பட்டமாகும். ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா, 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கோகோ காபை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டில் மூன்றாவது பட்டத்தை சபலென்கா கைப்பற்றினார்.
The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன் appeared first on Dinakaran.
