×

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: அனைத்து இந்திய போர் ஊர்தி தொழிற்சாலைகளின் அம்பேத்கர் தேசிய தொழிலாளர் சங்கம், பாதுகாப்பு துறை ஊழியர்கள் சங்கம் இணைந்து, அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் பாதுகாப்பு துறை நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பிக்கு பாராட்டு விழாவை ஆவடியில் நடத்தியது. பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி:

திமுக சார்பிலான மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவோடு இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதை பிரதமரோ, அமைச்சரவையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கின்றனர். இனி வரும் 2031ம் ஆண்டில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை ஒன்றிய பாஜ ஆட்சி நீடிக்குமா? இவ்வாறு கூறினார்.

The post வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Thirumavalavan ,Chennai ,Ambedkar National Workers' Union ,All India Ordnance Factories and Defence Employees' Union ,Ambedkar ,Viduthalai Siruthaigal Party ,Defence Standing Committee ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...