×

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் சொத்து வரி உயர்வா? அரசு விளக்கம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நகர்ப்புற அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் சதவிகிதத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 11.5 சதவிகிதம் சொத்துவரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15வது நிதிக்குழுவின் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையை கருத்தில் கொண்டு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 5.9.2024-ன்படி வெளியிட்ட அரசாணையின்படி 6% சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று (3ம் தேதி) வெளிவந்த ஒரு நாளிதழில் “எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவிகிதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக” வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் சொத்து வரி உயர்வா? அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Secretary of the ,Municipal ,Administration ,Water Supply Department ,Karthikeyan ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு