×

ஒமிக்ரான் வகை கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள மாடர்னா நிறுவனம் பிரத்யேக தடுப்பூசி

போஸ்டன்: ஒமிக்ரான் வகை கொரோனாவிலிருந்து காத்துக்கொள்வதற்காக மாடர்னா நிறுவனம் பிரத்யேக தடுப்பூசிக்கான பரிசோதனையை தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் அதிவேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒமிக்ரானிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள பயோடெக் நிறுவனமான மாடர்னா ஒமிக்ரான் பாதிப்பிற்காக பிரத்யேக பூஸ்டர் தடுப்பூசி தயாரிப்பதற்கான பரிசோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் மொடோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 600 பேரிடம் இந்த சோதனையை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒமிக்ரானுக்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போடுவது குறித்த சோதனையையும் மார்டனா நிறுவனம் தொடங்கியுள்ளது . ஒமிக்ரான் வைரஸை எதிர்கொள்ள 3 மற்றும் 4வது டோஸ் தடுப்பூசியை போடுவதற்கான சோதனையை தொடங்கியுள்ளது….

The post ஒமிக்ரான் வகை கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள மாடர்னா நிறுவனம் பிரத்யேக தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Moderna ,Boston ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...