×

கோவை வெள்ளியங்கிரி கோயில் பகுதிக்கு கும்கி யானை வரவழைப்பு


கோவை: வெள்ளியங்கிரி கோயில் பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானையை, காட்டுக்குள் விரட்ட கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி இம்முடிவு என கூறப்படுகிறது. டாப்சிலிப் முகாமில் இருந்து நரசிம்மன் என்ற கும்கி யானையை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். நாளை மேலும் ஒரு கும்கி யானை அழைத்து வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவை வெள்ளியங்கிரி கோயில் பகுதிக்கு கும்கி யானை வரவழைப்பு appeared first on Dinakaran.

Tags : Kumki Elephant ,Koi Viliyangiri Temple ,KOWAI ,KUMKI ,VITILIANGRI TEMPLE ,Viliyangiri ,TopSlip Camp ,Goi ,Dinakaran ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!