×

FIITJEE பயிற்சி மைய தலைவர் மீது சென்னையில் வழக்கு

சென்னை: தமிழ்நாடு FIITJEE தனியார் பயிற்சி மைய தலைவர் மற்றும் இயக்குனர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள FIITJEE தனியார் மையம் பெற்றோர்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. FIITJEE மையம் 9,10 ,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்க பணம் வசூலிக்கிறது. தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டும் பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. திடீரென மையத்தை மூடியதால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா FIITZEE தனியார் பயிற்சி மைய தலைவர் அங்கூர் ஜெயின், இயக்குனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post FIITJEE பயிற்சி மைய தலைவர் மீது சென்னையில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : FIITJEE coaching centre ,Chennai ,Chennai Central Crime Branch ,Tamil Nadu ,FIITJEE private centre ,Kilpakkam, Chennai ,FIITJEE centre ,Dinakaran ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...