சென்னை: ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்வு எழுதியோருக்கான முடிவுகள் மே 2ம் வாரத்தில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடந்தன. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 42 லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
மேற்கண்ட தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி டெல்லியில் நடக்கிறது. இந்த பணி முடிந்து தற்போது மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டைபோல், இந்த ஆண்டும் இரண்டு தேர்வுகளின் முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை cbse.gov.in, டிஜிலாக்கர் மற்றும் உமங் பயன்பாடு போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
The post சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: மே 2வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.
