×

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: தேசிய தேர்வு முகமை

டெல்லி: மே 4-ம் தேதி நடக்கவுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டில் தேர்வுக்கான மையம் குறிப்பிடப்பட்டிருக்கும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.

The post நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: தேசிய தேர்வு முகமை appeared first on Dinakaran.

Tags : NEET EXAM ,NATIONAL SELECTION AGENCY ,Delhi ,National Examination Agency ,Dinakaran ,
× RELATED வேலை வாங்கி தருவதாக கூறி மபி வேளாண்...