சோழவந்தான், ஏப். 29: சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் எதிரே புதிதாக படித்துறை அமைத்து கொடுக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்தின் முக்கிய கோவில் நகரங்களில் சோழவந்தானும் ஒன்றாகும். வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இவ்வூர் விவசாயத்திற்கு மட்டுமன்றி ஆன்மிகத்திற்கும் உரியதாகவும் உள்ளது. இங்கு சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் கள்ளழகர் உற்சவம், வைகாசி மாதம் நடைபெறும் ஜெனகை மாரியம்மன் கோயில் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் வைகை ஆற்றைச் சார்ந்தே நடைபெறும்.
இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு சோழவந்தானிலிருந்து தென்கரையை இணைத்த வைகையாற்று தரைப்பாலத்தை அகற்றி, பெரிய தூண்களுடன் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கு மாற்றுப் பாதையாக சனீஸ்வரன் கோவில் எதிரே வைகையாற்று கரையோரம் இருந்த படித்துறைகளின் மேல் மண் நிரப்பி தற்காலிக சாலை அமைக்கப்பட்டு அதன் வழியாக போக்குவரத்து நடைபெற்றது.
The post சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் எதிரே புதிதாக படித்துறை அமைத்து கொடுக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
