×

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

காஷ்மீர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா அழைப்பின் பேரில் இன்று சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது. பஹல்காம் தாக்குதலை யாரும் ஆதரிக்கவில்லை, நாடு முழுவதையும் கோபத்தில் ஆழ்த்திவிட்டது. 21ஆண்டுகளுக்கு பிறகு கொடுரமாக தீவிரவாதிகள் தாக்கி உள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியவில்லை. விருந்தினர்களாக வந்தவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டியது என் கடமை; அதில் தவறிவிட்டோம் என காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஜம்மு-காஷ்மீர் போவை பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir Assembly ,Pahalgam ,Kashmir ,Assembly ,Lieutenant ,Governor ,Manoj Sinha ,Jammu and ,Kashmir Assembly ,Dinakaran ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில்...