மயிலாடுதுறை, ஏப். 25: மயிலாடுதுறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் மயிலாடுதுறை- சீர்காழி சாலையில் நத்தம் பெட்ரோல் பங்க் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளுடன் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அவர்கள் வைத்திருந்த 5 சாக்கு முட்டைகளில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் 45 கிலோ அளவில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் போதை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் போதைப் பொருட்கள் கடத்தி வந்தவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் விநாயகர் நகரைச் சேர்ந்த ரமேஷ்(வயது 52), மற்றொருவர் சீர்காழி திட்டை மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த குமரகுரு(43) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதே போல நாராயணபிள்ளை சாவடி அருகே ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் 10 கிலோ அளவில் கடத்திய நாராயணபிள்ளை சாவடி மெயின்ரோட்டை சேர்ந்த சாந்தி(25) என்பவரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மயிலாடுதுறையில் 55 கிலோ குட்கா கடத்திய ெபண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.
