×

ரயிலில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி

ஈரோடு, ஏப்.25: ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி-வீரபாண்டி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதன் பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதில், இறந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமாப்பூரை சேர்ந்த வெங்கடேசன் (50) என்பதும், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், வெங்கடேசன் ரயிலில் பயணித்தபோது படிகட்டில் இருந்து தவறி விழுந்து பலியானது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வெங்கடேசன் உடலை சேலம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Magudanjavadi ,Veerapandi ,Erode Railway Police ,Erode Railway Police… ,Dinakaran ,
× RELATED அம்மா உணவகம் ரூ.11 லட்சத்தில் சீரமைப்பு...