சென்னை: தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 9 கல்வியியல் கல்லூரிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். நீண்ட காலமாக பணியாற்றி வரும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், கெளரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 2019 முதல் மாத ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரியும், கெளரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி யுஜிசி தகுதிபெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் கவுரவ விரிவுரையாளர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநில கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பு கடந்த திங்கட்கிழமை தொடர் போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் தொடர் போராட்டம் நேற்று 3வது நாளாக நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 350 பேரை கைதுசெய்யப்பட்டதாக அச்சங்கத்தின் நிறுவனர் சிவகுமார் தெரிவித்தார்.
The post பணிநிரந்தரம் கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 3வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.
