முத்துப்பேட்டை, ஏப். 23: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில், இந்த ஆண்டு 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட என்எம்எம்எஸ் என்னும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திறன் தேர்வில் 18 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் நான்கு ஆண்டுகள் அரசின் உதவித் தொகை பெறத் தகுதியுடைவர்கள் ஆவர். இந்தநிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முத்துப்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பிரித்திகா தேசிய திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கும், மாணவிக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், வட்டாரக்கல்வி அலுவலர். சிவக்குமார் பள்ளிக்கு நேரில் வருகை தந்து பாராட்டு தெரிவித்தார். அப்போது தலைமை ஆசிரியர் செந்திவேல் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
The post முத்துப்பேட்டை தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.
