- வஜப்பாடி
- ரகுராம்
- மோகனப்பிரியா
- களரம்பட்டி வடக்கு ரங்கநாயக்கன்பாளையம்
- சேலம் மாவட்டம்
- சேசன்சாவடி கால்நடை மருத்துவமனை
- சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை...
- தின மலர்
வாழப்பாடி, ஏப்.23: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே களரம்பட்டி வடக்கு ரங்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரகுராமன் மனைவி மோகனப்பிரியா(34). இவர், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரவு, சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேசன்சாவடி கால்நடை மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், மோகனப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீசார், மர்ம நபர்களை தேடி வந்தனர். இதில், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சரண்(26), அவரது நண்பர் ஆமோஸ் ஆகியோர், சங்கிலி பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று சரணை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 பவுன் தாலிக்கொடியை கைப்பற்றினர். அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
The post வாழப்பாடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.
