×

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம்

குமாரபாளையம், ஏப்.23: வணிக நிறுவனங்கள் மே மாதம் 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டுமென நகராட்சியில் நடைபெற்ற வணிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வணிகர்கள், வியாபார நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி பொறுப்பு ஆணையர் அருள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். வணிக நிறுவனங்கள் வைத்துள்ள பெயர் பலகைகளில் கட்டாயம் தமிழ் இடம் பெற வேண்டுமெனவும், மே மாதம் 15ம் தேதிக்குள் அனைத்து நிறுவனங்களில் பெயர் பலகைகளிலம் தமிழில் எழுத வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வியாபாரிகள், வியாபார நிறுவனங்களின் நிர்வாகிகள் இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

The post வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Kumarapalayam ,Dinakaran ,
× RELATED 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்