×

நீட் தேர்வுக்கு எதிராக எடப்பாடியின் இரட்டை வேடம்: திமுக துண்டு பிரசுரம் விநியோகம்

திருவொற்றியூர்: நீட் தேர்வுக்கு எதிராக எடப்பாடியின் இரட்டை வேடம் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் துண்டுபிரசுரம் விநியோகம் செய்தனர். சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மத்திய பகுதி, மணலியில் திமுக மாணவரணி சார்பில், நீட் தேர்வை கொண்டுவந்த பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நீட் தேர்வை எதிர்ப்பது போன்ற அரசியல் நாடகம் நடத்தும் பழனிசாமியை கண்டித்து துண்டறிக்கை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதி செயலாளரும் மண்டலக் குழு தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் தலைமை வகித்தார்.

மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.எம்.செந்தில், நிர்வாகிகள் முத்துசாமி, மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு தொடர்ந்து அங்கீகாரம் கொடுத்து, மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துவரும் ஒன்றிய அரசை கண்டித்தும் நீட் தேர்வு எதிர்ப்பது போன்ற அப்பட்டமான அரசியல் நாடகம் நடத்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதன் பின்னர் வியாபாரிகள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி விளக்கினர்.

The post நீட் தேர்வுக்கு எதிராக எடப்பாடியின் இரட்டை வேடம்: திமுக துண்டு பிரசுரம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Edapadi ,NEET ,Chennai North-East District Thiruvotiyur Central Region ,Manali ,Bajagawa ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...